மூன்றாம் அலை வந்தாலும், எதிர்கொள்வதற்கு அரசு தயார்-அமைச்சர் மா.சு பேட்டி

மூன்றாம் அலை வந்தாலும், எதிர்கொள்வதற்கு  அரசு தயார்-அமைச்சர் மா.சு  பேட்டி
X
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சேலத்தில் கூறினார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் சேலம் இரும்பாலை அருகே 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் ஏற்பாடு செய்து வரும் தற்காலிக சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். இது தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கறியதாவது.,

சேலம் அரசு மருத்துவமனையில் 1081 படுக்கைகளில் 776 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது.இதர படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி இரண்டு மூன்று நாட்களில் செய்துதரப்படும்..

அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்படும் என்றார். குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இட நெருக்கடியை தவிர்க்க தடுப்பூசி மையம், மற்றும் கொரோனா பரிசோதனை மையம் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மகளிர் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும் 25 ம் தேதிக்குள் இரும்பாலையில் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் எவ்வித தட்டுபாடும் இன்றி ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாகுறையை போக்க தமிழகம் முழுவதும் 2000 மருத்துவர்கள் 6000 செவிலியர்கள் 2000 தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே அக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் மேலும் 70 மெட்ரிக் டன் தேவை உள்ளது.

மேலும் பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறினார். இது மட்டுமில்லாமல் கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையே வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இரண்டாம் அலை முடிவதற்கு முன்பாக அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயாராகிவிடும் என்றும் கூறினார்.

Tags

Next Story