சேலம் அருகே வெடிகுண்டு வீச்சில் இளைஞர் படுகாயம்; மக்கள் சாலை மறியல்

சேலம் அருகே வெடிகுண்டு வீச்சில் இளைஞர் படுகாயம்; மக்கள் சாலை மறியல்
X

நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

சேலம் அருகே மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சேலம் மாவட்டம், மல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் சிறுவயது முதலே ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மல்லூரில் உள்ள இவரது குலதெய்வம் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது நண்பர் முருகன் என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்து இரண்டு மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் வினோத்குமாருக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நாட்டு வெடிகுண்டு இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த பகுதியில் உள்ள பூபாலன் என்பவரது வீட்டிற்கு குறிவைக்கப்பட்டது. ஏற்கனவே பூபாலன் மீது 3 வழக்குகள் உள்ளதால் அவரது வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசி வந்த மர்மநபர்கள் சுவற்றின் மீது வீசியதால், சாலையோரம் நின்று கொண்டிருந்த வினோத்குமார் மீது பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு கோணத்திலும் 2 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அம்பேத்கார் நகர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மல்லூர் காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்ற நபர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business