மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு

மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு
X

மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சேலம் மாவட்டம், மல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள். இதில் 7 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட லதாவும், அதிமுக சார்பில் கவி பிரியாவும் போட்டியிட்டனர். திமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் லதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் லதா தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர் லதா உள்ளிட்ட 7 பேரும் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். தொடர்ந்து புதியதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!