பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த 250 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த 250 கிலோ குட்கா பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட குட்கா கடத்தியவர் 

பெங்களூரில் இருந்து சேலத்திற்கு 250 கிலோ குட்காவை கடத்தி வந்தவரை கைது செய்த காவல்துறையினர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் மாநகர துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையிலான சிறப்பு காவல்படையினர் கொண்டலாம்பட்டி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகம் ஏற்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக, குட்கா பொருட்கள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த கலுசிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 250 கிலோ மதிப்பிலான குட்கா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலம் ஆத்தூருக்கு குட்கா மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. யாருக்காக எடுத்து வரப்பட்டது ? என்பது குறித்து கடத்தி வந்த நபரிடம் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story