சேலத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் 4 பேர் கைது

சேலத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் 4 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரி.

சேலத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொண்டாலம்பட்டி வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தலா 75 கிலோ எடை கொண்ட 150 மூட்டை அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஓமலூரிலிருந்து வாழப்பாடிக்கு ரேஷன் அரிசி கடத்தச்செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட அயோத்தியபட்டினம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், மாயக்கண்ணன், சதீஷ் மற்றும் ஒடிசாவை சேர்ந்த நாராயணன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil