சேலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

சேலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது
X
சேலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தும், விரட்டிப் பிடித்தும் கைது செய்தனர்.

சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி ஏரி பகுதியில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக கொண்டலாம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போதும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வருவதை கண்டு தப்பியோட முயன்றனர். அப்போது காவல்துறையினர் சுற்றி வளைத்தும், விரட்டிப் பிடித்தும் 14 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!