பண பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்கு சேலம் சரகத்திற்கு துணை ராணுவம், எல்லை பாதுகாப்பு படையினர் வந்துள்ளன. இவர்கள் போலீசாருடன் இணைந்து கொடி அணி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க 33 பறக்கும் படையும், 33 நிலை கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 11 தொகுதிக்கும் தலா 6 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் நிலையான சோதனைச்சாவடிகளாக கொளத்தூர் மற்றும் தீவட்டிப்பட்டியில் தலா ஒரு சோதனைச்சாவடி உள்ளது. இதுபோக மாவட்ட போலீசார் ஏற்காடு, அயோத்தியாப் பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சோதனைச்சாவடிகளை ஏற்படுத்தி சோதனையிட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க தொகுதிக்கு ஒருதற்காலிக சோதனைச்சாவடியை ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 11 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு செயல் சோதனைச்சாவடி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்த சோதனைச்சாவடிகளில் நிலை கண்காணிப்பு குழுவினர் நின்று வாகன சோதனையில் ஈடுபடவுள்ளனர். இதேபோல் தர்மபுரியில் 9 சோதனை சாவடிகளும், நாமக்கல்லில் 16 சோதனை சாவடிகளும், கிருஷ்ணகிரியில் 21 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன . இந்த சோதனை சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் கூறுகையில் பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தி வாகன சோதனை நடத்தப்படுகிறது என்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu