சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
X

சேலம் கலெக்டர் கார்மேகம்

சேலம் மாவட்டத்தில், நாளை செவ்வாய்க்கிழமை, 138 மையங்களில், 15500 தடுப்பூசிகள் போடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை (13.07.2021) செவ்வாய்க்கிழமை, மொத்தம்138 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு, மொத்தம் 15,500 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இம்மையங்களில், பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி மட்டும் போடப்பட உள்ளன. இந்த தடுப்பூசியை போடச்செல்லும் பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு, நேரில் சென்று கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது