சேலத்தில் 138 மையங்களில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்
மாதிரி படம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது கிடைத்துள்ள கையிருப்பின் அடிப்படையில் இன்று பொதுமக்களுக்கு 138 மையங்களில் 21,500 கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முககவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் முதல், இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். தற்போது போதுமான கையிருப்பு இல்லாத காரணத்தினால் கோவாக்சின் தடுப்பூசி போட இயலாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu