சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29ம் தேதி) விடுமுறை

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29ம் தேதி) விடுமுறை
X

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம். 

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சேலத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வந்து பள்ளிகளில் இதர பணிகளை தொடர மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!