சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18ம் தேதி) விடுமுறை
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் 5.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வீரகனூரில் 2.5 செ.மீ., ஆத்தூர் 4.8 செ.மீ, தம்மம்பட்டி 4.2 செ.மீ., கெங்கவல்லி 4 செ.மீ., ஏற்காடு பகுதியில் 1.4 செ.மீ, சேலம் மாநகராட்சி பகுதியில் 0.76 செ.மீ, மேட்டூர் 0.14 செ.மீ, எடப்பாடியில் 0.22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 27.3 செ. மீ மழை பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu