வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு

வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு
X

தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற எழுத்து தேர்வு 

வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று தொடங்கியது

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், வேளாண் விரிவாக்க அலுவலர் மற்றும் பல்வேறு காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் இன்று தொடங்கியது.

வருகின்ற 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 ஆயிரத்து 686 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளனர் இவர்களுக்கான எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் 27 கூடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த எழுத்து தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வுகள் அனைத்தும் வீடியோ கேமரா பதிவு செய்ய செய்யபட்டுள்ளது. இதன் அடிப்படையில் சேலம் ஜெயராம் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நூற்றுக்கணக்கான க இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வினையொட்டை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்