Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 கன அடியாக சரிவு

Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 கன அடியாக சரிவு
X

Salem News- மேட்டூர் அணைப் பகுதி.

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடியிலிருந்து 5 கன அடியாக சரிந்தது.

Salem News, Salem News Today- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 16 கன அடியிலிருந்து 5 கன அடியாக சரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 700 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 500 கன அடியாக குறைந்துள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (ஏப்.,1) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 46 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (ஏப்.,2) காலை 8 மணி நிலவரப்படி 16 கன அடியாகவும், இன்று (ஏப்.,3) காலை 8 மணி நிலவரப்படி 5 கன அடியாகவும் சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 59.54 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 59.26 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 24.13 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்