சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர்
பேருந்து நிலையத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Salem News Today: சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள முழுஉருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து சேலத்தில் ரூ.52 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.245.18 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, சேலத்தில் ரூ.96.53 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு மாநகர பஸ் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஈரடுக்கு பஸ் நிலையத்திலிருந்து பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரே நேரத்தில் 80 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகருக்குள் பயணம் செய்யும் பஸ்கள் தரைத்தளத்தில் நிறுத்தப்படும். சேலம் மாநகருக்கு வெளியே செல்லும் பஸ்கள் முதல் தளத்தில் இருந்து இயக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் மறுசீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம்,பெரியார் பேரங்காடி, வ.உ.சி. மார்க்கெட்,போஸ் மைதான வணிக வளாகம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறவுள்ளது. பின்னர், நாளை மறுநாள் (12.06.2023) காலை 8 மணி அளவில் காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu