டாஸ்மாக் 3 நாட்களுக்கு மூடல்

டாஸ்மாக் 3 நாட்களுக்கு மூடல்
X
சேலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடல் - கலெக்டர் தகவல்.

சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழகத்தில் வரும் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 4 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், அரசு மதுபானக்கடைகள் மற்றும் அரசு மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business