சேலம் மாநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி,மின்னலுடன் பலத்த கன மழை

X
மாதிரி படம்'
By - T.Hashvanth, Reporter |21 Aug 2021 1:30 AM
சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம் அயோத்தியபட்டினம் மல்லூர் ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் இந்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. அதிகாலை மழையின் காரணமாக பணிக்கு செல்வோர் மற்றும் காய்கறி சந்தைக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu