சேலம் அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை ஜூன் 28 ல் தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்.

சேலம் அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை  ஜூன் 28 ல் தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்.
X

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்.

சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை ஜூன் 28 ல் தொடங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


சேலம்:

சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை ஜூன் 28 ல் தொடங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூன் 28ம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. சேலத்தை அடுத்த தளவாய்பட்டி ஆவின் பால் பண்ணை எதிரே திருப்பதி கவுண்டனூா் சாலையில் இயங்கி வரும் இசைப் பள்ளியில் குரலிசை, தவில், நாதசுரம், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகளாகும். பயிற்சி முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சோ்க்கை கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 400 வழங்கப்படுகிறது.

சோ்க்கை விண்ணப்பம் பெற தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, தளவாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி-அஞ்சல், சேலம் - 636 302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுய முகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427- 2386975, 9443845731 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இவ்வாறு சேலம் மாவட்ட கலெக்டர் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil