சேலம் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இதுவரை 355 பேர் வேட்புமனு

சேலம் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இதுவரை 355 பேர் வேட்புமனு
X

பைல் படம்.

சேலம் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இதுவரை 355 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் அதிமுக , பாமக, மக்கள் நீதி மய்யம், சுயேட்சை என பல்வேறு கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி சேலம் மாநகராட்சியில் (60 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 நகராட்சிகளில் (165. வார்டுகள்) இன்று வரை மொத்தம் 70 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 31 பேரூராட்சிகள் (474 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 216 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 355 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா