சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற சீர்மிகு நகர திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 81 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 45 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 பணிகள் செயல்பாட்டில் உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்திமிடம், தம்மண்ணன் சாலை மற்றும் சத்திரம் சாலை, ஆனந்தா பாலம் அருகில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம், பெரியார் பேரங்காடி அபிவிருத்தி பணிகள், பள்ளப்பட்டி ஏரிகள் அபிவிருத்தி செய்து அழகு படுத்தும் பணி, மார்க்கெட் மேம்பாடு, எருமாபாளையம் பசுமைவெளி பூங்கா பணிகள், சாலைகள் சீர் அமைக்கும் பணி, ஓடைகள் பலப்படுத்தும் பணி, குமரகிரி ஏரி புரனமைத்தல், பள்ளப்பட்டி ஏரிகள் புரனமைத்தல், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்ற வருகிறது.
இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், சீர்மிகு திட்டபணிகளை விரைந்து முடித்து மாநகராட்சி பகுதிகள் அழகுற திகழ்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கொரோனா காலத்தில் சேலம் மாநகராட்சியில் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றி கொரோனா நோய் தொற்றினை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu