சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் இன்று 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் இன்று 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி
X
சேலம் மாவட்டத்தில் இன்று, 138 மையங்களில் 17,500 கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணை மட்டும் போடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள கையிருப்பின் அடிப்படையில், மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் 17, 500 இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த முகாமில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி மட்டும் போடப்படும். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, முககவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்தும் இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் வந்து தடுப்பூசி போடப்படும். தற்போது கையிருப்பு இல்லாத காரணத்தினால் முதல் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போட இயலாது என்றும் கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story
scope of ai in future