சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
X

சேலம் ஆட்சியர் அலுவலகம்

மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், பின்னர், மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தால் சேலம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(11.11.2021) சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

நிரம்பிய நீர் நிலைகள்

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெள்ளம் தேங்கி நிற்கிறது. சேலம் நகரில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு திருமணிமுத்தாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

செங்கல் அணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம், நாராயண நகர், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஐந்து ரோடு, நான்கு ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சேலம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!