சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவருக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை

சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவருக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை
X

சிறை தண்டனை விதிக்கப்பட்ட கௌதம், கார்த்தி.

சேலத்தில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய வழக்கில் இருவருக்கு தலா 18 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாகச் சேலம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம், கார்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் சங்ககிரி நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் கௌதம், கார்த்தி ஆகிய இருவருக்கும் தலா 18 மாத கால தண்டனை வழங்கினார். இரண்டு குற்றவாளிகளையும் சேலம் மற்றும் ஆத்தூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story