சேலம் அருகே கள்ளநோட்டுகள் அச்சடித்த மூவர் கைது: போலீசார் அதிரடி

சேலம் அருகே கள்ளநோட்டுகள் அச்சடித்த மூவர் கைது: போலீசார் அதிரடி
X

கைது செய்யப்பட்ட பொன்னுசாமி மற்றும் கூட்டாளிகள் சதீஷ், சின்னத்தம்பி.

சேலம் அருகே கள்ளநோட்டுகள் அச்சடித்து தீபாவளி நேரத்தில் புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவதாக காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் பொன்னுசாமி என்பவர் வீட்டில் நவீன பிரிண்ட்டர் இயந்திரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது கண்டிபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொன்னுசாமி மற்றும் கூட்டாளிகள் சதீஷ், சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரம் அளவிலான கள்ளநோட்டுகள், பிரிண்ட்டர் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தீபாவளி விற்பனையின்போது புழக்கத்தில் விட ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரியவந்தது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare