பேருந்து வழித்தடத்தில் செல்ல ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துனர் கைது

பேருந்து வழித்தடத்தில் செல்ல ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துனர் கைது
X

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நடத்துனர்.

பேருந்து வழித்தடத்தில் செல்வதற்காக ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற நடத்துநரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் சேலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் செல்ல தாரமங்கலம் பணிமனை தொ.மு.ச. செயலாளரும், நடத்துனருமான குணசேகரன் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஓட்டுநர் பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நரேந்திரனின் ஆலோசனையின்படி, பரமசிவம் லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை குணசேகரனிடம் வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக குணசேகரனை கைது செய்தனர். இதுதொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!