சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எத்தனால் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து ..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எத்தனால் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொச்சினில் இருந்து சென்னைக்கு 20 டன் எத்தனால் ஏற்றி வந்த லாரி சேலம் சங்ககிரி புறவழிச்சாலையில் உள்ள காக்காபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அசோக்குமார் பலத்த காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் கொட்டிக் கிடந்த எத்தனால் மீது தீ விபத்து ஏற்படாத வண்ணம் ரசாயனங்களை தெளித்தனர். அதிகாலையில் எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu