ஜேகேகேஎன், அகத்தியர் சிலம்பக்கூடம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜேகேகேஎன், அகத்தியர் சிலம்பக்கூடம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

சங்ககிரியில் நடந்த மருத்துவ முகாமில் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா பேசினார்.

ஜேகேகேஎன் பல்மருத்துவமனை, அகத்தியர் சிலம்பக்கூடம் , அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ஜேகேகேஎன் பலதுறை பல்மருத்துவமனை, அகத்தியர் தற்காப்பு சிலம்பக் கலைக்கூடம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பல்,கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கண் சிகிச்சை

இந்த இலவச மருத்துவ முகாம் சங்ககிரி ஆர்.எஸ்.கரிமேடு விளையாட்டுத்திடலில் நேற்று நடைபெற்றது. ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பேசினார். ஜேகேகேஎன் பலதுறை பல்மருத்துவமனையில் இருந்து பல் பரிசோதனை செய்வதற்காக டாக்டர்கள் வந்திருந்தனர். அதேபோல அகர்வால் கண் மருத்துவமனையில் இருந்து கண் பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் வந்திருந்தனர்.

பல் சிகிச்சை

சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்,சிறுமியர் கலந்து கொண்டு பல் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். பொது மருத்துவ பரிசோதனையில் முதியோர் ஏராளமாக பங்கேற்று பயன் பெற்றனர்.

மருத்துவ முகாமில் கலந்துகொண்ட சிறுவர்கள்.

இந்நிகழ்ச்சியில் அகத்தியர் தற்காப்பு சிலம்பக் கலைக்கூடம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிலம்பம் கற்ற மாணவ,மாணவிகள் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!