இன்று முதல் இ பாஸ்: வாகன தணிக்கை தீவிரம்

இன்று முதல் இ பாஸ்:  வாகன தணிக்கை தீவிரம்
X
இன்று முதல் மீண்டும் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து சேலத்தில் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

ஊரடங்கின்போது பொதுமக்கள் பயணம் செய்வதற்கு இன்று முதல் மீண்டும் இபாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இ பாஸ் வைத்துள்ள வாகன ஓட்டிகள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இ பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை மாவட்ட எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி, தொப்பூர், ஆச்சாங்குட்டப்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!