சேலம் - கோவை நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித் என்ற இளைஞர், பழனிக்கு சென்று விட்டு அவரது நண்பர் அருண் என்பவருடன், நேற்று முன்தினம் மாலை, சொந்த மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, தாறுமாறாக ஓடிய கருப்புநிற கார் ஒன்று மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களை, வாகன ஓட்டிகள் மீட்டு, மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே இரு சக்கர வாகனம் மீது கார் மோதும் பதைபதைக்கும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu