சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்; ஒருவர் சாவு

சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்; ஒருவர் சாவு
X

கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; ஒருவர் உயிரிழந்தார்.

சேலத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து சங்ககிரி அருகில் புதிய பேருந்து நிலைத்திருக்கும் பழைய பேருந்து நிலையத்திற்கும் இடைப்பட்டபகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இதனால் பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த அருகில் உள்ளவர்கள் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் சங்ககிரி மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!