கருணை கொலை செய்துவிடுங்க... மருத்துவமனையில் கைதி தர்ணா - பரபரப்பு!

கருணை கொலை செய்துவிடுங்க...  மருத்துவமனையில் கைதி தர்ணா - பரபரப்பு!
X
சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தாமதமாகும் என மருத்துவர்கள் கூறியதால், சேலம் அரசு மருத்துவமனையில் கைதி ஒருவர், கருணை கொலை செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வேலூர் மாவட்டம் துரைப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. 2019 ம் ஆண்டு, சங்ககிரியில் நடந்த கொலை சம்பவத்தில் விசாரணை கைதியாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு, அதற்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு மருத்துவர்கள் ட்யூப் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுநீர் வெளியேறும்போது மிகுந்த எரிச்சல் உண்டாவதாகக்கூறி, இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக, கணபதி அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மருத்துவரிடம், ட்யூபை எடுத்துவிட்டு சிறுநீரக கோளாறுக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு, கணபதி கேட்டுள்ளார்.

அதற்கு மருத்துவர்கள், கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, அவசர அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது நடைபெறுவதால் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய கால தாமதமாகும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த கணபதி, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் போலீஸார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்று, மீண்டும் சிறையில் அடைத்தனர். கைதியின் தர்ணாவால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!