சேலம், திருப்பூரில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம்!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சேலம், திருப்பூர் மாவட்டங்களில், வேளாண் சட்டம் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டத்தை, விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வேளாண்சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டமானது சேலம் மாநகரம் மற்றும் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

திருப்பூரில்...

இதேபோல், திருப்பூர் மாவடத்திலும், திருப்பூர் நகரிலும் போராட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில், பல்லடம் சாலை, அகத்தியன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமும், சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம், மாநில பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தாராபுரம் சிவக்குமார், குண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குங்குமம்பாளையம் முத்துச்சாமி மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future