காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி

காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி
X

சேலத்தில் காதலனை நம்பி கணவனை கைவிட்ட இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது கணவர் கேசவன். இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் ஐந்து வயதில் சாட்ஷா என்கிற மகள் உள்ளார். இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சசி கணவரை பிரிந்து அவரது மகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ரவீந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர்பு நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடப்பதாக தகவல் அறிந்த சசி, ரவீந்திரனுடன் தன்னை சேர்த்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!