சேலத்தில் ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய வாலிபர் - துணிச்சலாக மீட்ட பெண் போலீசார்

சேலத்தில் ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய வாலிபர் - துணிச்சலாக மீட்ட பெண் போலீசார்
X

சேலம் ரயில்நிலையத்தில்  ரயில் வண்டிக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய, பத்திரமாக மீட்கப்பட்ட  பீஹார் இளைஞர்.

சேலம் ரயில்நிலையத்தில், ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய இளைஞரை, பெண் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு சிறுகாயங்களோடு மீட்டனர்.

சேலம் ஜங்சன் ரயில்நிலையத்தில் நான்காவது நடைமேடையில் ரயில்வே தலைமைக்காவலர் மஞ்சு மற்றும் அஸ்வினி ஆகியோர் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 1:30 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ஹாட்யாவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டி, சேலம் ரயில்நிலையத்தில் நிறுத்தி மீண்டும் புறப்பட்டது.

அப்போது குதித்த இளைஞர் ஒருவர், ரயில் வண்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கியுள்ளார். இதனை கண்ட பெண் காவலர்கள் இருவரும்,கண்ணிமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு, அந்த இளைஞரி லேசான காயங்களோடு மீட்டனர்.

அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த சிவன்குமார் என்பதும் சேலம் ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்டபோது ரயில் புறப்பட்டு விட்டதால் ரயிலில் இருந்து குதித்தபோது கீழே விழுந்ததும் தெரியவந்தது. இளைஞரை மீட்ட பெண் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags

Next Story