சேலம் சோனா கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

சேலம் சோனா கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
X

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சேலம் சோனா கல்லூரியில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

சேலம் சோனா கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாணவியர் யோகாசனங்கள் செய்து கொண்டாடினர்.

உலகிற்கு இந்தியா வழங்கிய அற்புதமான கலை, யோகா. யோகாசனங்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே, பல்வேறு யோகாசங்களை செய்து, இந்த தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.

அவ்வகையில், சேலம் சோனா கல்லூரி குழுமத்தில், சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கல்வி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். மேலும் மாணவ மாணவிகள் பலரும், ஆன்லைன் மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology