சேலம் அருகே கல்லால் தாக்கி பெண்கூலித்தொழிலாளி கொலை

சேலம் அருகே கல்லால் தாக்கி பெண்கூலித்தொழிலாளி கொலை
X

சேலம் அருகே கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி விஜயா

மதுபோதையில் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்ட கோவிந்தராஜை தட்டிக்கேட்ட கூலித்தொழிலாளி விஜயாவை கல்லால் தாக்கியுள்ளார்

சேலத்தில் மதுபோதையில் பெண்கூலித்தொழிலாளி ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற கூலித்தொழிலாளி நாள்தோறும் மது அருந்திவிட்டு அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போன்று நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டின் முன்பாக பிரச்னை செய்து கொண்டிருந்த கோவிந்தராஜை, அப்பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் கல்லால் தாக்கியதில், படுகாயமடைந்த விஜயா சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் உயிரிழந்தார். போதையில் இருந்த கோவிந்தராஜை சுற்றிவளைத்து ஊர் மக்கள் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. அழகாபுரம் காவல்துறையினர், கோவிந்தராஜை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுபோதையில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்