சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு

இஸ்மாயில் கான் ஏரி ஆக்கிரமிப்புகளை மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆய்வு செய்தார்.
சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, தீர்வு கண்டு வருகிறார். அவ்வகையில் இன்று, தனது தொகுதிக்கு உட்பட்ட 3 வது கோட்டம், இஸ்மாயில் கான் ஏரி பகுதிகளில் ஆய்வு செய்தார்.
ஏரியில் இருந்து வெளிவரும் உபரிநீர், திருமால் நகர், ஸ்ரீராம் நகர், வசந்த நகர், தங்கவேல் நகர், ரெட்டியூர் ஆகிய பகுதிகள் வழியாக திருமணி முத்தாற்றை அடையும். அந்த பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரும் வெளியேற முடியாதபடி, தனியார் மருத்துவமனை நீண்ட காலமாக ஆக்கிரமிப்புத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை, சட்டமன்ற உறுப்பினர் அருள் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து சாக்கடை நீரும், மழைநீரும் வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது மழைக்காலம் என்பதால், ஏரி உபரி நீரும், கழிவு நீரும் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu