கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாறவேண்டும்: உதயநிதி விருப்பம்
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், சேலம் மேற்கு தொகுதி மக்களுக்கு அரிசி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.
சேலம் மாவட்டத்தில், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், 11 சட்டமன்றத்தொகுதியில், 10 லட்சத்து 49 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அரிசி வழங்கி வருகிறார். நேற்று சேலம் வடக்கு, ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று அரிசி வழங்கினார்.
இன்று, சேலம் மேற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு, முதற்கட்டமாக 350 நபர்களுக்கு அரிசி வழங்கினார். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையை 2 ஆயிரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 25 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu