கொரோனா சிகிச்சைக்கு ரயில் பெட்டிகள் தயார்-ரயில்வே மேலாளர்

கொரோனா சிகிச்சைக்கு ரயில் பெட்டிகள் தயார்-ரயில்வே மேலாளர்
X

கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2 வது அலை காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு மும்பையில் பதிவான காட்சிகள் தான் தற்போது ரயில் நிலையங்களில் எவ்வித பயணிகள் கூட்டமும் இல்லை. மத்திய அரசு அறிவித்தபடி அனுமதி பெற்றவர்கள் மட்டுமே ரயிலில் பயணித்து வருவதாக விளக்கினார். மேலும் பொய்யான வீடியோக்களை யாரும் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும் கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரயில்வேயில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!