சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!

சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
X

சேலத்தில்,  பாம்புகள் பிடிப்பது குறித்த பயிற்சி பெறும் வனப்பணியாளர்கள்.

சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மழைக்காலம் தொடங்குவதால், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வந்தால் அதனை பணியாளர்கள் பாதுகாப்பாக பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் இருந்து, ஆண் - பெண் என, 50க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்து கொண்டு பாம்புகளைப் பிடித்து, அவற்றை பாதுகாப்பாக கையாள்வதை குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் யோகேஷ் மீனா, உயிரியல் பூங்கா அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!