/* */

சேலம் : தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் : தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 4  ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
X

சேலம் மாநகரப் பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை, காவல்துறையினர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தல், அடிதடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மணியனூர் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன், தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் என்ற இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் ஆகிய இருவரும் பணம் பறித்தல், வியாபாரிகளிடம் கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுதல் மற்றும் மது விலக்கு குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நால்வரும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். பின்னர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 30 July 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...