140 நாட்களுக்கு மேலாக சுரங்கத்தொழிலாளர்கள் போராட்டம்: எம்எல்ஏ நேரில் ஆலோசனை

சேலத்தில், 140 நாட்களுக்கு மேலாக சுரங்கத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ அருள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான செயில் ரீஃபேக்டரிங் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக ஒட்டுமொத்த பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளன. சுரங்கம் திறக்கப்படாததால், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதாரப்பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சுரங்கங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள், சேலம், ஓமலூர் சாலையில் உள்ள செயில் ஃபேக்டரி சுரங்கம் முன்பாக கடந்த 140 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையறிந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்ட மன்ற உறுப்பினர் அருள், தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, செயில் ஃபேக்டரி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, சுரங்கத்திற்கு தேவையான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ்களை உடனடியாக பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு அதிகாரிகளிடம், சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். இரு சுரங்கங்களையும் திறக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை, நேரில் சந்தித்து தீர்வு காண அனைத்து முயற்சிகளுக்கும் தாம் மேற்கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!