/* */

சேலம்: சூறாவளி காற்றுடன் பலத்த மழை

சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு .

HIGHLIGHTS

சேலம்: சூறாவளி காற்றுடன் பலத்த மழை
X

சேலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் இன்று பலத்த மழை.. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ..

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் இன்று மாலை சேலத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறியது.

தொடர்ந்து மழையோடு சேர்ந்து சூறைக் காற்று வீசியதால் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாபேட்டை, குகை, அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, 5 ரோடு, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியாதால் நகராட்சி ஊழியர்கள் சாலையில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேலத்தில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Updated On: 25 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...