சேலம் மாநகராட்சியில் இன்று 47 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்

சேலம் மாநகராட்சியில் இன்று 47   இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில், இன்று 47 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பெரிய மோட்டூர், கார்காலன் தெரு, ராமலிங்கா நகர், சுந்தரம் காலனி, தென் அழகாபுரம், கோரிமேடு, மேற்கு விநாயகர் கோவில் தெரு, பார்க் தெரு, தீர்த்தகிரி ரோடு, காசி முனியப்பன் கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து, பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ரெட்டியூர் ஓம் சக்தி நகர், அந்தோணிபுரம், மாரியம்மன் கோவில் தெரு, பள்ளப்பட்டி ரத்தினசாமி தெரு,கான்வென்ட் ரோடு, அண்ணா சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை எட்டி குட்டை தெரு, அரியாக்கவுண்டம்பட்டி, ரங்கா நகர், வேல்சாமி தெரு, பேர்லாண்ட்ஸ், கோர்ட் ரோடு காலனி, நாகம்மாள் தோட்டம், அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 47 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!