சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்

சேலத்தில் 354 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்
X

சேலத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்

சேலம் பகுதிகளில் 354 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையில் சேலம் மாநகராட்சி சார்பில் 354 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழவகைகள் மற்றும் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டலத்தில் 136 காய்கறி வாகனங்கள், 4 மளிகை பொருட்கள் வாகனங்கள் என 140 நடமாடும் விற்பனை வாகனங்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 43 காய்கறி வாகனங்கள், 20 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 63 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் அம்மாபேட்டை மண்டலத்தில் 27 காய்கறி விற்பனை வாகனங்கள் 3 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என மொத்தம் 74 நடமாடும் விற்பனை வாகனங்களும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 62 காய்கறி வாகனங்கள், 15 மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்கள் என 77 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீட்டின் அருகே காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் குறைந்த விலையில் தேவைக்கேற்ப பெற்றிடும் வகையில் 154 நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் வாகன விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் நலன் மட்டுமின்றி பொது நலன் கருதி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், நோய்த்தொற்று தடுக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை உணர்ந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் எனவும், அனைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தோடு ஒத்துழைத்து நோய்த்தொற்று பரவலை தடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story