பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி ஆணையாளர்

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி ஆணையாளர்
X
பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றை முற்றிலும் தடுத்திடும் வகையில், மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வூட்டும் பணிகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்காக அதிக அளவில் வந்து செல்லும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, நியாய விலைக்கடைகள், வருவாய் கிராம நிர்வாக அலுவலகங்கள், இ – சேவை மையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட அரசு சார்ந்த இடங்களில், பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கும் வகையில், 6 அடி இடைவெளியுடன் கூடிய அடையாள வட்டங்களை வரையும் பணியினை, சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில், சுகாதாரப்பணியாளர்கள் வாயிலாக நியாய விலைக்கடைகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் அடையாள வட்டங்கள் வரையப்பட்டு வருகிறது. குமாரசாமிப்பட்டி நியாய விலைக்கடை மற்றும் குமாரசாமிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகங்களின் முன்பாக சமூக இடைவெளிக்கான அடையாள வட்டங்கள் வரையும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், பார்வையிட்டார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுச்சேவைகள் வழங்கும் அரசு அலுவலகப்பகுதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் காய்கறி, மீன், இறைச்சி அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனத்தினர், தங்களது வாடிக்கையாளர்கள் முகக்கவசங்கள் அணிந்து வருவதை உறுதி செய்வதோடு, சமூக இடைவெளிக்கான அடையாள வட்டங்களை வரைந்து முறையாக அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!