சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு வாகனம்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா  விழிப்புணர்வு வாகனம்
X

சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாநகர காவல் உதவிஆணையர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாநகர காவல் உதவிஆணையர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாநகர காவல் துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் சேலம் மேற்கு சரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 29 வாகனங்கள் அழகாபுரம் பள்ளப்பட்டி இரும்பாலை போன்ற பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 ஆட்டோ வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுவரையில் சூரமங்கலம் மேற்கு கோட்ட காவல் எல்லைப்பகுதியில் 35 வாகனங்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொரானா தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, முன்னேற்ற நடவடிக்கைகள், முக கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக செல்லும் இந்த வானங்கள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்