குடிநீர் இணைப்பை துண்டித்து பழிவாங்கல்: பஞ்., தலைவர் மீது ஆட்சியரிடம் புகார்
குடிநீர் இணைப்பை துண்டித்த பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது ஆட்சியரிடம் புகாரளிக்க வந்த குடும்பத்தினர்.
சேலம் மல்லமூப்பம்பட்டி நாடார் தெருவில் வசிப்பவர் அன்பு. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மல்லமூப்பன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் வீட்டின் கழிவறை தொட்டியும், குடிநீர் தொட்டியும் அருகருகே இருப்பதால் கழிவுநீர் கலந்து வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், சூரமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அன்பு வீட்டின் குடிநீர் இணைப்பை பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாளின் கணவர் ஆறுமுகம் துண்டித்துள்ளார். மீண்டும் குடிநீர் குழாயை இணைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் குடிநீர் இணைப்பு கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
வட்டார வளர்ச்சி அலுவலரும், ஆறுமுகத்திற்கு இணைங்கி நடக்குமாறு கூறுவதாக அன்பு குற்றம் சாட்டினர். இந்தநிலையில், இன்றைய தினம் அன்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக விலை கொடுத்து குடிநீர் வங்குவதாக வேதனை தெரிவித்தார். தனக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக்ததில் தீக்குளிக்க நேரிடும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu