டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து விற்பனை: கைது செய்யக் கோரி புகார்

டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து விற்பனை: கைது செய்யக் கோரி புகார்
X

புகார் கொடுக்க வந்த பாலாஜி மற்றும் உறவினர்கள்.

சேலத்தில் டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த மோசடி நபரை கைது செய்ய கோரி புகார்.

சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் 20 சொகுசு வாகனங்களை கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரிடம் பணியாற்றி வந்த வினோத் என்பவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறி ஆறு சொகுசு கார்களை பாலாஜியிடம் இருந்து வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார. இந்த நிலையில் வெகு நாட்களாகியும் வாடகை தராமலும் கார்களை திருப்பி கொடுக்காமலும் வினோத் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி அவர் வழங்கிய முகவரிக்கு சென்று பார்த்த பொழுது அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே அப்பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து தலைமறைவாகியது தெரியா வந்துள்ளது. இதனையடுத்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் மாயக்கண்ணன் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து சென்று விற்பனை செய்த வினோத் மீது நடவடிக்கை எடுத்து கார்களை மீட்டுத் தரும்படி உரிய இழப்பீட்டை பெற்று தரும்படி புகார் மனு அளித்தனர் .

இந்நிலையில் வினோத் முன்னதாகவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், வழக்கு சம்பந்தமாக இன்று சூரமங்கலம் காவல் நிலையம் வந்தார். அதனை அறிந்த பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து அவரை கைது செய்து கார்களை மீட்டு தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!