ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சேலத்தில் குவிந்த பொதுமக்கள்
X
ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சேலம் இரும்பாலை செல்லும் சாலையில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.


இதனிடையே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மருந்து விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டதால் சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

எனினும், வெளியூரில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு முதலே மருந்துக்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதால் காத்திருக்கும் அனைவருக்கும் மருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தட்டுபாடு இன்றி மருந்து கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story