துணை முதல்வர் பதவி உண்டா? புதிய முதல்வர் வெளியிட்ட தகவல்...

துணை முதல்வர் பதவி உண்டா?  புதிய முதல்வர் வெளியிட்ட தகவல்...
X
புதுச்சேரியில், துணை முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சேலத்தில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சராக நாளை மறுதினம் பதவியேற்க உள்ள நிலையில், என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சேலத்தில் உள்ள அப்பா பைத்திய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் நாளை மறுதினம் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக புதிய அரசு கட்டாயம் பணியாற்றும்.

புதுச்சேரி அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடம் உண்டு. புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து பரிசீலனை ஏதுவும் செய்யவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஒருவேளை, மத்திய அரசு இதற்கான ஆணையை வெளியிட்டால், அப்போது இதுபற்றி குறித்து பரிசீலிக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்க்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில், கொரானா தொற்று அதிகமாவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!